Saturday, 27 February 2016

வெண்ணெய் | காளமேகப்புலவர் KalamekapPulavar 110

அலைகடல் பாம்பின் மேல் கண்ணன் | திருமால்
தெய்வத்தின் கோலங்களை முறை மாற்றி வைத்துப் பாடிக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுமாறு பாடிய வெண்பா.
  • வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் மேல் களவு ஏது? கண்ணன் பாம்பின் மீது ஏறிப் பாற்கடல் அலையில் துயின்றான்.
  • அரன் வேணியான். பெண்ணைத் தலையில் சுமந்தான்.  

சரபம் = பாம்பு
வேணி = சடைமுடி

பாடல்

வெண்ணெய் திருடியுண்ட வேணியர னாரிருக்கக்
கண்ணன்மேல் வைத்த களவேதுபெண்ணைத்
தலையிற்சுமந் தான்மால் சரப்பத்தி லேறி
அலையிற் றுயின்றா னரன் . (110)

வெண்ணெய் திருடி உண்ட வேணி அரனார் இருக்கக் கண்ணன்மேல் வைத்த களவு ஏது பெண்ணைத் தலையில் சுமந்தான் மால் சரப்பத்தில் ஏறி அலையில் துயின்றான் அரன் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி