Saturday, 27 February 2016

தீத்தான் | காளமேகப்புலவர் KalamekapPulavar 109

சிவன் கையில் தீ
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார்.

பாடல்

தீத்தானுன் கண்ணிலே தீத்தானுன் கையிலே
தீத்தானு முன்றன் சிரிப்பிலேதீத்தானுன்
மெய்யெலாம் புள்ளிருக்கு வேளூரா வுன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள் .(109)

தீத்தான் உன் கண்ணிலே தீத்தான் உன் கையிலே தீத்தான் னும் உன்றன் சிரிப்பிலே தீத்தான் உன் மெய் எலாம் புள்ளிருக்கு வேளூரா உன்னை இந்தத் தையலாள் எப்படிச் சேர்ந்தாள்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி