Thursday, 25 February 2016

நஞ்சு | காளமேகப்புலவர் KalamekapPulavar 108

முந்தானை | கலைச்சிகரம் 
நஞ்சுகுடி, இஞ்சிகுடி – என்று பாடியது. முப்புரம் எரித்த சிவபெருமானின் கணை நஞ்சு (விடம்) கொண்டது. நாலும் (எல்லாம்) தெரிந்தவன் சிவன். அவன் இஞ்சிகுடி ஊருக்கும் வந்து அந்தக் கணையை எய்வானோ? மாட்டான். இங்கு உமையம்மை தன் முலைமுகட்டால் அழுத்தி, முத்தமிடுவாள். தன் முந்தானைக்குள் (கலைச்சிகரம்) அணைத்து வைத்திருப்பாள். 

பாடல்

நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னிலும்வந் தெய்வானோவிஞ்சு
முலைச்சிகரத் தாலழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தாலணைத்தக் கால் . (108)

நஞ்சு குடிகொண்ட கணை நாலும் தெரிந்தும் அதன் இஞ்சிகுடி தன்னிலும் வந்து எய்வானோ விஞ்சு முலைச் சிகரத்தால் அழுத்தி முத்தமிட்டுச் சற்றே கலைச் சிகரத்தால் அணைத்தக்கால் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி