Wednesday, 24 February 2016

ஏய்ந்த தனங்கள் | காளமேகப்புலவர் KalamekapPulavar 107

செக்கு உலக்கை
அவள் இடை அப்படி
பாகற்காய், செக்குலக்கை என்றெல்லாம் வரப் பாடியது. உமையாகிய அவளுக்கு இரண்டு முலைகள். அவை இரண்டும் தன்னை அம்மையப்பர் என்று, ஆண்பெண் என்று, இரண்டு பாகங்களாக வைத்துக்கொண்டிருக்கும் சிவனுக்கென்று உருவாகி இருக்கின்றன. அவளுக்கு வாய்த்திருக்கும் இடையோ செக்கில் இருக்கும் உலக்கை போல் மட்டுமே உள்ளது. அவள் கூந்தலில் மூன்று கலச் சிக்குப் பிடித்திருக்கும். (சடை போட்டிருக்கும்) மூதேவியான கமலைக்குகும், கலிச்சியாகிய திருமகளுக்கும், கலைச்சியாகிய சரசுவதிக்கும் இதே தலைச்சிக்கு-தான்.

பாடல்

ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய்
வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமேதேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச் சிக்கு. (107)

ஏய்ந்த தனங்கள் இரண்டும் இருபாகற்கு ஆய் வாய்ந்த விடை செக்கு உலக்கை மாத்திரமே தேய்ந்த குழல் முக்கலச் சிக்கும் பிடிக்கும் மூதேவியாள் கமலைக்குக் கலிச்சிக்கும் கலைச்சிக்கு.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி