Tuesday, 23 February 2016

ஆலங்குடி | காளமேகப்புலவர் KalamekapPulavar 104

ஆலங்ககுடி சிவன் கோயில் 
ஆலங்குடியான் என்னும் சொல்லைப் பிரிமொழிச் சிலேடையாக அமைத்து வியப்பு தோன்றப் பாடிய வெண்பா. திருவாலங்குடியில் கோயில் கொண்டுள்ள சிவன் ஆலாலம் (ஆலகால விடம்) உண்டான். அவனை ஆலம் (விடம்) குடிக்காதவன் என்று ஆர் சொல்லிவைத்தார்கள்? அவன் நஞ்சினைக் குடிக்காவிட்டால் மண்ணுலகில் உள்ள மக்களெல்லாம் அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மடிந்துபோவார்கள் அல்லவா?   

பாடல்

ஆலங்குடி யானை யாலால முண்டானை
ஆலங்குடியா னென்றார் சொன்னார்ஆலங்
குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
மடியாரோ மண்மீ திலே . (104)

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம் குடியானே ஆயின் குவலையத்தார்  எல்லாம் மடியாரோ மண் மீதிலே .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி