Tuesday, 23 February 2016

சிரித்து | காளமேகப்புலவர் KalamekapPulavar 103

அமுதம் | அமிழ்தம் கடைதல்
  • சிவன் தன் வாயால் சிரித்ததும் அவனது நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீ முப்புரம் எரித்தது.
  • செந்தூரப் பொடி தரும் மரத்தை உரித்து அதன் செந்நிறப் பட்டை ஆடையை உடுத்தான்.
  • வருத்தமுடன் வாடும் அடியாரின் பயத்தைப் போக்கி அவர்களுடன் இருந்தான்.
  • அமுதம் கடையும்போது நஞ்சு (ஆலகால விஷம்) வெளிப்பட்டது. அதனைக் கண்டதும் இருபுறமும் நின்று பாம்புக் கயிற்றை இழுத்துக் கடைந்த வானவரும் தானவரும் அஞ்சி ஓடினர். சிவன் அந்த நஞ்சை எடுத்து உண்டு அவர்கள் ஓடும் பயத்தைத் தீர்த்தான்.

பாடல்

சிரித்துப் புரமெரித்தான் செந்துரத்தைப் பற்றி
உரித்துதிரம் பாய வுடுத்தான்வருத்தமுடன்
வாடுமடி யாருடனே வானவருந் தானவரும்
ஓடுபயந் தீர்த்தநஞ் சுண்ணி .(103)

சிரித்துப் புரம் எரித்தான் செந்துரத்தைப் பற்றி உரித்து உதிரம் பாய உடுத்தான் வருத்தமுடன் வாடும் அடியாருடனே வானவரும் தானவரும் ஓடுபயம் தீர்த்த நஞ்சு உண்ணி .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி