Monday, 22 February 2016

சீரங்கத்தார் | காளமேகப்புலவர் KalamekapPulavar 101

சங்கு ஊதுகிறான்
இவன் கையில்
சிகண்டி இல்லை
சீரங்கம், திருவானைக்கா இரண்டும் அருகருகில் உள்ள இரண்டு ஊர்கள். சீரங்கம் பெருமாள் தலம். திருவானைக்கா சிவன்-தலம். சீரங்கத்தில் வாழ்பவர் வைணவர். திருவானைக்காவில் வாழ்பவர் சைவர். எந்தத் தெய்வம் பெரியது என்று வாதிட்டுக்கொண்டு இரண்டு ஊராரும் சண்டையிட்டுக்கொண்டனர். இருவரும் ஒருவரே என்று காளமேகப் புலவர் கூறி இரு ஊராரையும் அமைதிகொள்ளச் செய்த பாடல் இது.
சீரங்கத்தாரும் திருவானைக்காவாரும் போரை ஒர் உறுப்பாக எண்ணிக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வது ஏன்? ஒருபக்கம் பேசும்  ஓரங்கள் வேண்டாம். இது என்ன? விபரம் தெரியாதோ? ஆண்டிப்பண்டாரமும் தாதனும் பயன்படுத்தும் இசைக்கருவிகளைப் பாருங்கள். சங்கு திருமால் கருவி. சிகண்டி சிவன் கருவி. ஆண்டிப்பண்டாரம் சிவன் புகழ் பாடுபவன். தாதன் பெருமாள் புகழ் பாடுபவன். இருவரும் சங்கு, சிகண்டி ஆகிய இரண்டு இசைக்கருவிகளையும் கையில் வைத்துக்கொண்டு சங்கு ஊதியும், சிகண்டி அடித்தும் அவரவர் தெய்வங்களைப் பாடுகின்றனர்.

பாடல்

சீரங்கத் தாருந் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன்ஓரங்கள்
வேண்டாமி தென்ன விபரந் தெரியாதோ
ஆண்டானுந் தாதனுமா னால் . (101)

சீரங்கத்தாரும் திருவானைக்காவாரும் போர் அங்கமாகப் பொருவதேன் ஓரங்கள் வேண்டாம் இது என்ன விபரம் தெரியாதோ ஆண்டானும் தாதனும் ஆனால்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி