Sunday, 21 February 2016

வாதக்கால் | காளமேகப்புலவர் KalamekapPulavar 100

புள்ளிருக்கு வேளூர்
வைத்தியநாத சுவாமி கோயில்
தஞ்சைப் பகுதி புள்ளிருக்கு வேளூரில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள சிவன் வழிபட்டவரின் நோய்களையெல்லாம் தீர்ப்பார் என்பது ஐதீகம். தனக்கும் தன் உறவினர்களுக்கும் இருக்கும் நோய்களையே தீர்த்துக்கொள்ளாத வைத்தியநாதர் நமது எந்தத் தீவினைகளைத் தீர்த்துவைப்பார் என்று வேடிக்கையாகப் புலவர் வினவும் பாடல் இது. 
  • இவருக்கோ வாதக்கால். ஆடும்போது ஒருகால் வரவில்லை. 
  • மைத்துனன் திருமாலுக்கு நீரிழிவு. பாற்கடல் நீரிலேயே கிடக்கிறார். 
  • மகன் பிள்ளையாருக்குப் பொதுபொது என்று இருக்கும் பெரிய வயிறு
  • சொல்கிறேன் கேளுங்கள். 
  • தமக்கும் தம்மவருக்கும் வந்த தீவினைகளைப் போக்கிக்கொள்ள முடியாத இவர் நமக்கு வந்திருக்கும் எந்த வினையைத் தீர்த்துவைப்பார்?   


பாடல்

வாதக்காலாந் தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப்பெரு வயிறாம் புத்திரனுக்கோதக்கேள்
வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
எந்தவினை தீர்த்தா ரிவர் . (100)

வாதக்காலாம் தமக்கு | மைத்துனற்கு நீரிழிவாம் | போதப் பெருவயிறாம் புத்திரனுக்கு | ஓதக் கேள் | வந்தவினை தீர்க்க வகை யறியார் வேளூரர் | எந்தவினை தீர்த்தார் இவர் .

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்ட காளமேகப் புலவர்.

</poem> 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி