Saturday, 23 January 2016

நச்சரவம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 65

திருவிழாவின்போது தில்லை நடராசர் வீதியில் உலா வரக் கண்டு வஞ்சப் புகழ்ச்சியாகக் காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
நஞ்சுள்ள பாம்பை அணிந்துகொண்டுள்ள தில்லைநாதரே!
நீர் தேவர்களில் மேம்பட்ட பெருந்தேவராயிற்றே!
பிச்சை எடுத்து உண்ணலாமா?
பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டபோது, உச்சக் கட்டத்தில் ஊதப்படும் கொம்பு (காளம்) ஏன்?
முன்னே நடைபோடும் குஞ்சரம் ஏன்?
கடல் போல் முழங்கும் ஏன்?
இப்படி அரசனுக்கு உரிய விருதுகள் ஏன்?

பாடல்

நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும்உச்சமாங்
காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராசாங்க மேன் .(65)

நச்சு அரவம் பூண்ட தில்லை நாதரே, தேவரீர், பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டும், உச்சமாம் காளம் ஏன், குஞ்சரம் ஏன், கார்க்கடல் போல் தான் முழங்கும் மேளம் ஏன், ராசாங்கம் ஏன்.
காளம்
ஊது கொம்பு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி