Saturday, 23 January 2016

நீறாவாய் | காளமேகப்புலவர் KalamekapPulavar 61


சிவபெருமானைச் சபித்துப் சிறப்பித்துக் காக்கும்படி வேண்டி ஒரு பாடலில் காளமேகப் புலவர் பாடிக்காட்டியது.
  • மேனியெல்லாம் திருநீறாகப் போகக் கடவாய்.
  • உன் நெற்றி நெருப்பாகப் போகக் கடவாய்.
  • உன் உடம்பு இரு கூறாக (அம்மை, அப்பன்) போகக் கடவாய்.
  • உன் மேனி நெருப்புக் கொளுந்தாகப் போகக் கடவாய்.
  • எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும் நட்டமாக (நடனமாக) போகக் கடவாய்.
  • உன் சோறு நஞ்சாகப் போகக் கடவாய்.

இப்படியெல்லாம் நீ போய் அடியேனை இனி விருப்பமாய் (இட்டமாய்) காப்பாயாக.

பாடல்

நீறாவாய் நெற்றி நெருப்பாவா யங்கமிரு
கூறாவாய் மேனி கொளுந்தாவாய்மாறாத
நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டமாய் காப்பா யினி . (61)

நீறு ஆவாய் | நெற்றி நெருப்பு ஆவாய் | அங்கம் இரு கூறு ஆவாய் மேனி | கொளுந்தாவாய் | மாறாத நட்டம் ஆவாய் | சோறு நஞ்சு ஆவாய் | நாயேனை இட்டமாய் காப்பாய் இனி .
நடராசர்
மாறாத நட்டம் ஆவாய்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி