Sunday, 31 January 2016

குற்றம் உலகநீதி UlagaNiti 4

  • பிறர் குற்றத்தைப் பாராட்டிக்கொண்டு அலையக் கூடாது.
  • கொலை, களவு முதலான தீய செயங்களைப் புரிபவரோடு சேரக் கூடாது.
  • கல்வி கற்றவரைப் பழிக்கக் கூடாது.
  • கற்பு நெறியில் வாழும் பெண்ணை மாற்றான் எவனும் அடைய நினைக்கவும் கூடாது.
  • அரசனை எதிர்த்துப் பேசக் கூடாது.
  • வழிபடும் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
பத்தரை மாற்றுத் தங்கம் போல் இணையில்லா மாற்றுத்திறன் கொண்ட குறவர் மகள் வள்ளி. 

பாடல்

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 4
கோயில்

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி


மனம் உலகநீதி UlagaNiti 3


  • மனம் போன வழி எல்லாம் போய் மனத்தை அலைய விடக் கூடாது.
  • பகைவனை உறவுக்காரன் என்று நம்பிவிடக் கூடாது.
  • பணம் சம்பாதித்து உண்டு மகிழாமல் மறைத்துப் புதைத்து வைக்கக் கூடாது.
  • அறம் செய்யவேண்டும் என்னும் நினைவோட்டத்தை மறந்துவிடக் கூடாது.
  • கோபத்தை வரவழைத்துக்கொண்டு அதனால் வரும் துன்பத்தையும் வரவழைத்துக் கொள்ள வேண்டாம்.
  • கோபத்தோடு இருப்பவர் பக்கமே போகக் கூடாது.
நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
காட்டைத் தேடி வாழும் குறவர் மகள் வள்ளி. 

பாடல்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 3

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
மனம் போகும் போக்கு 


நெஞ்சு உலகநீதி UlagaNiti 2

  • நெஞ்சு நிறையப் பொய் சொல்லக் கூடாது.
  • நிலைபேறில்லாத செயலை நிலைநாட்டிக்கொண்டு இருக்கக் கூடாது.
  • நச்சுப் பொருள்களோடு பழகக் கூடாது.
  • நன்கு ஒத்து வராதவர்களுடன் சேரக் கூடாது.
  • தனிவழி ஒன்றை வகுத்துக்கொண்டு போகக் கூடாது.
  • அடுத்தவரைக் கெடுக்கக் கூடாது.

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
மேகங்களோடு வாழும் குறவர் மகள் வள்ளி.  
பாடல்

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 2

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி



ஓதாமல் உலகநீதி UlagaNiti 1


  • படிக்காமல், படித்ததைச் சொல்லாமல் எந்த நாளிலும் இருக்கக் கூடாது.
  • யாரையும் குற்றம் குறை சொல்லக் கூடாது.
  • பெற்ற தாயை எந்த நாளிலும் மறக்கக் கூடாது.
  • ஏமாற்றுபவரோடு சேரக் கூடாது.
  • கண்ணிலிருந்து விலகியவுடன் அவரைப் பற்றிக் குறை சொல்லக் கூடாது. 

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
வாகு = தோது 
தோதாக வாழும் குறவர் மகள் வள்ளி. 

பாடல்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 1

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
இப்படி வளர்த்த தாயை மறக்கக் கூடாது 


Saturday, 30 January 2016

உலகநீதி கடவுள் வாழ்த்து UlagaNiti 0

கடவுள் வாழ்த்து


உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு

உலகநீதிப் புராணம் என்பது நூலின் பெயர்.
பழங்கதை பொதிந்த பாட்டைப் புராணம் என்பது பொதுவழக்கு.
இந்தப் பாடலில் புராணம் என்னும் சொல் பழமையான நீதி பொதிந்த பாடல்களை உணர்த்துகிறது.
இந்த நீதித் தொகுப்பை உரைக்கக் கலைகளாய் நம்முள் வெளிவரும் ஆனைமுகன் காப்பாற்றுவானாக.


கரிமுகன் 

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி

உலகநீதி பாடல்கள் UlagaNiti

உலகநாதன் பாடிய உலகநீதி


உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு - கடவுள் வாழ்த்து விளக்கம்


மயிலேறும் பெருமான் 

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 1 விளக்கம்

மயிலேறும் பெருமான்

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 2 விளக்கம்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 3 விளக்கம்

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 4 விளக்கம்

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 5 விளக்கம்

வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார்கூ லியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புக ழாளன்ஒரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே - பாட்டு 6 விளக்கம்

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே - பாடல் 7 விளக்கம்

சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 8 விளக்கம்

மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச்? சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 9 விளக்கம்

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே - பாடல் 10 விளக்கம்

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானே - பாடல் 11 விளக்கம்

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 12 விளக்கம்

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே - பாடல் 13 விளக்கம்

உலகநாதன் பாடிய உலகநீதி முற்றும்

எழுத்து வெற்றிவேற்கை VetriVerkkai 1

முன்னோர் எழுதிவைத்த எழுத்துக்களை படித்தறியும் அறிவைப் புகட்டியவன் இறைவன் ஆவான்.

பாடல்

எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். 1
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.

கொற்கையாளி குலசேகரன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை) - 15 ஆம் நூற்றாண்டு
எழுத்து 


நூற்பயன் வெற்றிவேற்கை VetriVerkkai 2


  • வெற்றி வேலைக் கையிலே கொண்ட வீரராமன் கொற்கையில் இருந்துகொண்டு அரசாண்டவன். 
  • இவன் குலசேகரன் என்று போற்றப்பட்டவன். 
  • இவன் பாடிய நூல் நறுந்தொகை. 
  • இது நல்ல தமிழ்நெறியைத் தெரிந்துரைக்கும் நூல். 
  • இதில் கூறப்பட்டுள்ள நெறியைக் கடைப்பிடித்துத் தம் குற்றங்களை நீக்கிக்கொள்பவர் குறைவில்லாதவராக வாழ்வார்.
  • வெற்றி வேலைக் கையில் பிடித்திருப்பது போன்ற பாடல்களைக் கொண்ட நூல் வெற்றிவேற்கை.  
நன்னெறிகளின் தொகுப்பு நறுந்தொகை.

பாடல்

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைவோர் குறைவிலா தவரே. (நூற்பயன்)

வெற்றி வேல் கை வீர ராமன் கொற்கை யாளி குலசேகரன் 
புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவு இலாதவரே.

கொற்கையாளி குலசேகரன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை) - 15 ஆம் நூற்றாண்டு

வெற்றிவேல்


கடவுள் வாழ்த்து வெற்றிவேற்கை VetriVerkkai poems 1


  • ஐங்கரன் என்பவர் ஆனைமுகப் பிள்ளையார்.
  • ஓம் என்னும் மந்திரம் பிரணவப் பொருள்.
  • 2 கை, 2 கால், வளைந்த துதிக்கை ஆகிய ஐந்தின் எழுத்துருவம் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை எழுதிக் காட்டுவது போல் உள்ளது.
  • எனவே ஆனைமுகப் பிள்ளையாரைப் பிரணவப் பொருள் என்கிறோம்.
  • அவன் திருவடிகளாகிய அற்புத மலரை நாம் நம் தலையில் அணிந்துகொள்வோம்.

பாடல்

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே (கடவுள் வாழ்த்து)

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புத மலர் 
தலைக்கு அணிவோமே 


கொற்கையாளி குலசேகரன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை) - 15 ஆம் நூற்றாண்டு
ஐங்கரன்
பிரணவம் 

வெற்றிவேற்கை VetriVerkkai poems

வெற்றிவேற்கை என்னும் இந்த அறநூலுக்கு நறுந்தொகை என்னும் பெயரும் உண்டு. இது 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறநெறி நூல். ஆசிரியர் கொற்கையாளி குலசேகரன். கொற்கை நகரிலிருந்து அரசாண்ட மூன்றாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியன் (1429-1473}. அதிவீரராம பாண்டியன் (1564-1604) எனச் சிலர் கருதுவர்.

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே (கடவுள் வாழ்த்து)

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைவோர் குறைவிலா தவரே. (நூற்பயன்)

எழுத்து அறிவித்தவன் | ஆசிரியர்
 
எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். 1
கல்விக் கழகு கசடற மொழிதல். 2
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். 3
வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். 4
மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. 5
வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். 6
உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். 7
மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். 8
தந்திரிக் கழகு தறுக ணாண்மை. 9
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல் 10
பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். 11
குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். 12
விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். 13
அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். 14
வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. 15

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே. 16

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 17

பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். 18
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர். 19
பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். 20
உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். 21
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். 22
அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. 23
சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. 24
அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது.  25
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.  26
கலக்கினும் தண்கடல் சேறா காது. 27
அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் . 28 (சில பதிப்புகளில் மட்டும்)
ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. 29 (சில பதிப்புகளில் மட்டும்)
பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. 30

சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. 31

சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற்
பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. 32

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. 33

ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.  34

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே. 35

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. 36

நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயிற் கீழிருப் பவனே. 37

எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர். 38

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். 39
யானைக் கில்லை தானமுந் தருமமும். 41
பூனைக் கில்லை தவமுந் தயையும். 42
ஞானிக் கில்லை யின்பமுந் துன்பமும். 43
சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். 44
முதலைக் கில்லை நீத்தும் நிலையும். 45
அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. 46
நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. 47
கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. 48
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. 49

குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். 50

சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். 51

அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர். 52

குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே யழியினும் அழிவர். 53

எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பா ழாயினு மாகும். 54

பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
நெற்பொலி நெடுநக ராயினு மாகும். 55

மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.  56

இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே. 57
இரந்தோர்க் கீவது முடையோர் கடனே. 58

நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லா மில்லை யில்லில் லோர்க்கே. 59

தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. 60

குன்றுடை நெடுங்கா டூடே வாழினும்
புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. 61

ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. 62

கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே. 63

சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்றேர் குறவர் தேயம் நன்றே. 64

காலையு மாலையும் நான்மறை யோதா
அந்தண ரென்போ ரனைவரும் பதரே. 65

குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. 66

முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. 67

வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. 68

தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவட் பாராப் பேதையும் பதரே. 69

தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப்
பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. 70

தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. 71

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். 72

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே. 73

மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற்
பொய்போ லும்மே பொய்போ லும்மே. 74

இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. 75

பழியா வருவது மொழியா தொழிவது. 76
சுழியா வருபுன லிழியா தொழிவது. 77
துணையோ டல்லது நெடுவழி போகேல். 78
புணைமீ தல்லது நெடும்புன லேகேல். 79

எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா தனகொடு முயல்வா காதே. 80

வழியே யேகுக வழியே மீளுக. 81
இவைகா ணுலகிற் கியலா மாறே. 82

Friday, 29 January 2016

வீரன் கொன்றைவேந்தன் KontraiVentan 84

வில் வீரனுக்குத் துணை கூர்மையான அம்பு.

பாடல்

வீரன் கேண்மை கூரம் பாகும் 84
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்  

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
கூர் அம்பு 

விருந்து கொன்றைவேந்தன் KontraiVentan 83

இல்வாழ்க்கைக்குப் பொருந்திய ஒழுக்கம் விருந்தினரைப் பேணுதல்.
வீட்டுக்கு விருந்து வரவில்லை என்றால் கலகலப்பான மகிழ்ச்சி வாழ்க்கை இல்லை.

பாடல்

விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் 83
விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
விருந்தினர் 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி