Sunday, 20 December 2015

பாக்கு | காளமேகப்புலவர் KalamekapPulavar

கொட்டைப்பாக்கு என்று எடுத்துக் களிப்பாக்கு என்று முடித்து ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

கொட்டைப்பாக் கும்மொருகண் கூடையைப் பார்க்குமடியில்
பிட்டைப்பாக்கும் பாகம் பெண்பாக்கும்முட்டநெஞ்சே
ஆரணனு நாரணனுமாதி மறையுந் தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு (48)

இந்தப் பாடலில் பாக்கு என்னும் சொல் பாக்கும் என்று பலமுறை பயின்று வந்துள்ளது. பார்க்கும் என்பதன் பேச்சுவழக்கு வடிவமாக இது பயின்று வருகிறது.
  • கொட்டை என்பது தாமரை. தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் கொட்டைப்பாக்கு. இவன் சிவனது முடியைத் தேடிக்கொண்டு சென்றான். ஒரு கண்ணால் மட்டும் கூடிப் பார்க்கும் நிலைக்கு ஆளானான். (முடியைக் காணச் சென்ற பிரமனின் கண் ஒன்று சிவப்பேரொளி தாங்கமாட்டாமல் குருடானது.  
  • பிட்டை என்பது பிட்டுக்கு மண் சுமந்த சிவன். இவன் பிட்டு தின்னப் பிட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
  • இவனது பாகத்தைப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறாள். (உமை)
  • நெஞ்சே! எல்லாவற்றுக்கும் காரணமானவனாக விளங்கும் சிவபெருமானைக் கண்டு களி. களிப்பார்க்கு அவன் அரண வேத முதல்வன் பிரமன், நாரணன், ஆதி மறை (வேதம்) அனைத்தும் தேடும் காரணன்.
அவனை முட்டக் (முற்றும் அளவுக்குக்) கண்டு களிப்படைவாயாக.
கொட்டை என்னும் தாமரையில் இருந்துகொண்டு பார்ப்பவன் | பிரமன் 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி