Sunday, 20 December 2015

செருப்பு | காளமேகப்புலவர் KalamekapPulavar

செருப்பு என்று எடுத்து விளக்குமாறு என்று முடித்து ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்லமருப்புக்குத்
தண்டேன் பொழிந்த திருத்தா மரையிருக்கும்
வண்டே விளக்கு மாறே .(49)

சிவபெருமான் போரிடப் புகுந்தான். வீரர்களை அழித்தான். வேலால் அழித்தான். அவன் கயிலாய பொருப்புக்கு (மலைக்கு)த் தலைவன். அவனைப் பிரமன் தழுவிக்கொண்டான். மரு = மணம். மணம் புகுந்து தேன் பொழியும் திருத்தாமரையில் இருக்கும் பிரமனே இந்தச் செய்திஈயை விளக்குகிறான். (விளக்கும் ஆறாக விளங்குகிறான்).
தாமரை வண்டு | தாமரையில் இருக்கும் வண்டு | பிரமன்
 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி