Tuesday, 8 December 2015

திருமால் பிறப்பு 10 | காளமேகப்புலவர் KalamekapPulavar

திருமால் 10 பிறவி எடுத்தார். அந்த 10 பிறவிகளைப் பாதி வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சென்ம மெடுக்கவாமச்சாகூர்
மாகோலா சிங்கா வாமா ராமாராமாரா
மாகோபா லாமாவா வாய் . (44)

மெச்சுபுகழ் வேங்கடவா
வெண்பாவில் பாதியில்
என் இச்சையில்
உன் சென்மம் எடுக்கவா
  1. மச்சா | மச்சாவதாரமாக | மீன்
  2. கூர்மா | கூர்மாவதாரமாக | ஆமை
  3. கோலா | கோலம் என்னும் பன்றியாக
  4. சிங்கா | நரசிங்கப் பொருமாளாக | அரிமா, (சங்கம்)
  5. வாமா  | வாமனனாக
  6. ராமா | பரசுராமனாக
  7. ராமா | பலராமனாக
  8. ராமா | சீத்தாராமனாக
  9. கோபாலா | மாடு மேய்க்கும் கோபாலனாக
  10. மாவா | கல்கியாக | குதிரை
ஆய்பிறவி எடுக்க வா.
தசாவதாரம் | திருமாரின் 10 பிறப்பு 


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி