Thursday, 26 November 2015

காளமேகப்புலவர் திருமால் KalamekapPulavar

திருமாலைப் பொன்னாவரை இலை, காய், பூ (பொன், ஆ, வரை, இலை, காய், பூ) – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப்படுத்ததுவும்
அந்நா ளெறிந்துவு மன்பி னிரந்த்துவும்
பொன்னா வரையிலைகாய் பூ .(31)

உடுத்ததுவும் | மேய்த்ததுவும் | உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் | பள்ளிக்கு இயையப்படுத்ததுவும் |
அந்நா ளெறிந்துவும் | அன்பில் இரந்த்துவும் |
பொன் | ஆ | வரை | இலை | காய் | பூ .(31)

திருமால்
  • உடுத்தது பொன்னாலான ஆடை
  • மேய்த்தது ஆ (பசு)
  • உம்பர்கோன் இந்திரன். அவன் பொழிந்த மழையைத் தடுக்கும் குடையாக எடுத்தது வரை (மலை)
  • பள்ளிகொள்வதற்கு ஏந்தாகப் படுத்திருப்பது இலை (ஆலிலை)
  • அந்த நாளில் எறிந்தது காய் (விளாங்காய்) கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் – சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை.
  • மாவலி மன்னன் மீதுள்ள அன்பினால் அவனிடம் இரந்தது பூ (பூமியாகிய மூன்றடி மண்)
    திருமால் கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தான் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி