Saturday, 28 November 2015

காளமேகப்புலவர் ஈ KalamekapPulavar

ஈ உட்கார்ந்ததும் மலை குலுங்கியது – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.
வெண்ணெய் திருடாதே என்று கண்ணனை மத்தால் அடித்தல் 

பாடல்

வாரணங்க ளெட்டு மகமேருவுங் கடலும்
தாரணியு மெல்லாஞ் சலித்தனவால்நாரணனைப்
பண்வா யடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயி லீமொய்த்த போது . (35)

கண்ணன் வெண்ணெயைத் திருடி உண்டபோது ஆய்ச்சியர் வெண்ணெய் உண்ட வாயில் மத்தால் அடித்தனர்.
பண் பாடி அடித்தனர்.
அதனால் கண்ணன் வாயில் புண்.
அந்தப் புண்ணில் ஈ மொய்த்தது.
கண்ணன் மண்ணை உண்டவன்.
மண்ணுலகை விழுங்கியவன்.
வெண்ணெய் உண்ட வாயைத் திற என்று அவனை அடித்தபோது அவன் வாய்க்குள் மண்ணுலகம் தோன்றியது.

v  அதில் இருந்த மலைகள் குலுங்கின.
v  புண்வாயில் ஈ மொய்த்தபோது மலைகள் சலித்தன (குலுங்கின).
v  எட்டுத் திசைகளைக் காக்கும் யானைகள் குலுங்கின.
v  மேருமலை குலுங்கிற்று.  
v  கடல் குலுங்கிற்று.
v  உலகம் குலுங்கிற்று.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி