Thursday, 26 November 2015

காளமேகப்புலவர் கண்ணன் KalamekapPulavar

திருமாலைப் பொன்னாவரை இலை, காய், பூ (பொன், ஆ, வரை, இலை, காய், பூ) – என்று காளமேகப் புலவர் பாடிய மற்றொரு வெண்பா.

பாடல்

தோய்த்தான்மேய்த் தான்குடையாத் தூக்கினான் மேன்மேலாச்
சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான்ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தில்வரு மால்சாமி நாதாகேள்
பொன்னா வரையிலை காய்பூ .(32)

தோய்த்தான் \ மேய்த்தான் \ குடையாத் தூக்கினான் \ மேன்மேலாச்
சாய்ந்தான் \ எறிந்தான் \ பின்  சாப்பிட்டான்ஆய்ந்துசொலும்
மன்னா வரத்தில் வரும் மால்சாமிநாதா கேள்
பொன் \ ஆ \ வரை \ இலை \ காய் \ பூ .(32)

திருமால் 
  • தோய்த்தது பொன்
  • மேய்த்தது ஆ
  • குடையாத் தூக்கியது வரை
  • மேலேறிச் சாய்ந்திருப்பது இலை
  • எறிந்தது காய்
  • சாப்பிட்டது பூ


வரமிருந்து பெற்ற மால்சாமிநாதா! கேட்டுக்கொள். ஆராய்ந்து பார்த்து நீயே சொல்.
திருமால்
  • பொன் என்னும் திருமகளைத் தன் நெஞ்சுக்குள்ளே தோய்த்துப் பதுக்கி வைத்துக்கொண்டான்.
  • ஆனிரை மேய்த்தான்
  • மலையைக் குடையாகப் பிடித்தான்
  • ஆலிலை மேல் பள்ளிகொண்டுள்ளான்
  • கன்றை எறிந்து விளாங்காயை உதிர்த்தான்
  • பூமியை விழுங்கி வாய்க்குள்ளே காட்டினான்.
    ஆலிலை மேல் கண்ணன் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி