Wednesday, 25 November 2015

காளமேகப்புலவர் கிளி KalamekapPulavar

கின்னரி வாசிக்கும் கிளி – என்று காளமேகப் புலவர் பாடிய வெண்பா.

பாடல்

ஆடல்புரிந் தானென்று மந்நாளி லேமூவர்
பாடலுகந் தானென்றும் பான்மையினால்கூடலிலே
நன்னரிவா சிக்குநடை பயிற்றினா னென்றும்
கின்னரிவா சிக்கும் கிளி. (30)

கின்னரி = வீணை = யாழ்
கிளி சைவக் குரவர் நால்வர் கதையைச் சொல்லித் தன் வாயிசையில் யாழொலியை எழுப்பிக்கொண்டிருந்தது.
  • சிவன் ஆடல் புரிந்தான்.
  • அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவர் பாடல்களை விரும்பிக் கேட்டான்.
  • பாண்டியனின் கூடல் நகரில் நரியைப் பரியாக்கிக்கொண்டு நடந்து வந்தான். பின்னர் பரியை நரியாக மாற்றி அவற்றின் ஊளையிடும் குரலை வாசிக்கும்படிச் செய்தான்.  


 
நரி பரியாகி | பரி நரியாகி | நரி ஊளையிட்டது.

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி