Saturday, 14 November 2015

காளமேகப்புலவர் கூத்தியார் குரங்கு

காளமேகப்புலவர் கூத்தியாரும் குரங்கும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால்
சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன்
காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால்
கூத்தியர்க்கு நேராங் குரங்கு (14)

கூத்தியார் என்னும் வைப்பாட்டி
கடியதாய் (சடுதியில் விரைவாக) ஓடிவிடுவாள்.
கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள்.
எல்லாரிடத்திலும் காதல் சேட்டை செய்வாள்.
ஆசையுடன் காப்பாற்றும்போதே குட்டிவிடுவாள்.
கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தெட்டி (தெற்றி)ப்பறித்துக்கொள்வாள்.

குரங்கு
விரைவாக ஓடும்.
தான் உள்ள வரையை(மலையை) விரும்பும்.
எவராயிருந்தாலும் சேட்டை செய்யும்.
விருப்பத்துடன் காக்கும்பொருட்டுத் தன் குட்டியைப் பற்றிக்கட்டிக்கொள்ளும்.
பிறரிடமுள்ள பொருளைத் தெட்டிப் பறித்துக்கொள்ளும்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி