Saturday, 14 November 2015

காளமேகப்புலவர் பனைமரம் வேசை

காளமேகப்புலவர் பனைமரமும் வேசையும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. (11}

பனைமரம்  
பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித்தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும்ஏறுவர்.
எட்டி அதன் பன்னாடையைஇழுத்து எறிவர்.
முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால்அதன் கள்ளை அருந்துவர்.

வேசை என்னும் பொதுமகள்
வேசையரைக் கட்டித் தழுவுவர்.
காலைச் சேர்த்து வைத்துக்கொண்டுஅவள்மீது ஏறுவர்.
எட்டிப் பிடித்து அவளதுபன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர்.
முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ளஎச்சில் கள்ளை அருந்துவர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி