Thursday, 12 November 2015

காளமேகப்புலவர் மீன் பேன்

காளமேகப்புலவர் மீனும் பேனும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே. (10)

மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும்.
மற்று அதன் நீரலையிலே மேயும்.
திரும்பும் பின்-நீச்சலில் குத்தும்.

பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும்.
மன்னித் தலையிலே மேயும்.
பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும்.

இவை இரண்டிற்கும் பெருமை.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி