Monday, 9 November 2015

காளமேகப்புலவர் ஆமணக்கு யானை

காளமேகப்புலவர் தன் சொல்வன்மையால் ஆமணக்கு என்னும் கொட்டைமுத்தும் யானையும் ஒன்று என்று சிலேடைப்பாடலில் நிறுவுகிறார்.

பாடல்

முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும்ஏத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆமணக்கு மால்யானை யாம். (2)

ஆமணக்குச் செடியில் அமணக்கு என வழங்கப்படும்  கொட்டைமுத்து இருக்கும்.
(ஊன்றுகோல் போன்ற) தன் கொம்பை அசைக்கும்.
உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும்.
கொத்தாக இருக்கும் ஆமணக்கு தன் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்க்கும்.

யானை முத்துப்போன்ற தன் வெண்ணிறக் கொம்பை (தந்தத்தை) அசைக்கும்.
உள்ளே துளை உள்ள தன் துதிக்கைத் தண்டை ஏந்திக்கொண்டு வரும்.
கொத்தாகப் பழுத்திருக்கும் வாழைமரத்துக் குலையைச் சாய்க்கும்.


திருமலைராயன் வரையில் இந்த நிலைமை. 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி