Tuesday, 17 November 2015

காளமேகப்புலவர் துப்பாக்கி ஓலைச்சுருள்

துப்பாக்கி, ஓலைச்சுருள் இரண்டும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து காளமேகப்புலவர் நிறுவியுள்ளார்.

பாடல்

ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால்
தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால்நீணிலத்தில்
செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்
துப்பாக்கி யோலைச் சுருள் (19)

துப்பாக்கி
துப்பாக்கி இடைப்பகுதியில் ஆணி இருக்கும்.
குறிப்பைத் தாக்கி இலக்கைத் தரும்.
கருமருந்து உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.

ஓலைச்சுருள்
ஓலைச்சுருள் எழுத்தாணியால் எழுதப்படும்.
எழுதியவன் கருத்துக் குறிப்பைத் தரும்.
எழுதிய பின்னர் எழுத்துத் தெரிவதற்காக அதில் கருமருந்து பூசப்படும்.

திருமலைராயன் பாடல் சொல்லாதவர்களுக்கு உதவமாட்டான். பாடுபவர்களுக்கு உதவுவான்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி