Thursday, 12 November 2015

காளமேகப்புலவர் சந்திரன் மலை

காளமேகப்புலவர் சந்திரனும் மலையும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்றுதலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து (8)

சந்திரன் நிலாவாக விளங்குகிறது.
நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது.
தலைக்கு மேல் தோன்றி வருகிறது.

மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காணப்படுகிறது.
நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது.
சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம்.
அப்போது நமக்கு மேலே உயரமாகத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி