Thursday, 12 November 2015

காளமேகப்புலவர் நாய் தேங்காய்

காளமேகப்புலவர் நாயும் தேங்காயும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாதுசேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு . (9)

நாயானது ஓடும்.
இருக்கும்.
அதன் உள்வாய் பல்லைக் காட்டுவதால் வெள்ளையாக இருக்கும்.
நம்மை நாடி வரும்.
வாலைக் குலைத்துக்கொண்டு வருவருவதற்கு வெட்கப்படாது.

தேங்காயில் ஓடும் இருக்கும்.
தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும்.
தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும்.
தென்னைமரமாக இருக்கும்போது வளைந்துகொடுக்காது.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி