Tuesday, 17 November 2015

காளமேகப்புலவர் வானவில் விண்டு வெற்றிலை

வானவில், விண்டு, வெற்றிலை மூன்றும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து காளமேகப்புலவர் நிறுவியுள்ளார்.

பாடல்

நீரி லுளவா னிறம்பச்சை யாற்றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால்சாருமனுப்
பல்வினையை மாற்றுதலாற் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை (20)

வானவில்
வானவில் நீரினால் உண்டாகும்.
நிறம் பச்சையாக இருக்கும்.
திருவில்எனப் போற்றப்படும்.
உலகில் பகைமையை ஒழித்து ஒற்றுமையுடன் வாழச் செய்யும்.
அதனைச் சார்ந்த மனு என்னும் அரசனின் வல்வினையைப் போக்கிற்று.

விண்டு (விஷ்ணு)
விண்டு என்னும் திருமால் பாற்கடல் நீரில் இருக்கிறான்.
பச்சைநிறம் கொண்டவன்.
பாரதப் போரில் பகைமையைத் தீர்த்து வைத்தான்.
மனு என்னும் அரசனின் வல்வினையை மாற்றினான்.

வெற்றிலை
நீரில் முளைத்து வளரும்.
பச்சைநிறம் கொண்டது.
திரு என்னும் மங்கலச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
பகை நீங்கி உறவாடுவதன் அடையாளச் சின்னமாக வெற்றிப்பாக்கு வைக்கப்படும்.
வினை தீர்க்கும் மருந்தாக விளங்கும்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி