Saturday, 14 November 2015

காளமேகப்புலவர் வெற்றிலை வேசை

காளமேகப்புலவர் வெற்றிலையும் வேசையும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால்தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையாமே. (12)

வெற்றிலை
வெற்றிலையானது விற்போர் கையால் நீரில் குளிப்பாட்டப்படும்.
கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக்கிள்ளுவர்.
கவுளி கவுளியாக அடுக்கிக்கட்டி வைக்கப்படும்.

வேசை என்னும் விலைமகள்
வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள்.
குளித்துவிட்டு உலாத்துவாள்.
அவன் அவள்மேல் ஏறிக்கொண்டுஅவள் அழகு மேனியை ஆசையாகக்கிள்ளுவான்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி