Monday, 9 November 2015

காளமேகப்புலவர் யார்

திருவானைக்கா கோயில் உலகம்மை நாழிகை
பாண்டியநாட்டுத் திருமோகூர் கோயில் பூசாரி மகன் காளமேகம் என்று கூறும் கருத்து ஒருபுறம் உண்டு.

திருவரங்கம் திருமால் கோயிலில் பணிபுரிந்துவந்த வரதன் என்னும் இளைஞனே கருமேகம் போலக் கவிமழை பொழியும் ஆற்றல் பெற்றுக் காளமேகம் ஆனான் என்பது மற்றொரு கருத்து.
காளம் = கருமை. காள் < காளி
திருவானைக்காவல் தேவரடியாள் மோகனாங்கி மேல் காதல் கொண்டு அவளுக்காகச் சைவனாக மாறி, திருவானைக்கா சிவபெருமானையும் அம்மை அகிலாண்டேசுவரியையும் வழிபட்டு, அம்மை அருளால் ஆசுகவி பாடும் வல்லமை பெற்றார் என்னும் கதையும் உண்டு.

தமிழகத்தில் விசயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி புரிந்த மன்னன் திருமலைராயன் அவையில் அவ்வரசனின் அவைக்களப் புலவர் அதிமதுரப் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடல்களைப் பாடி வெற்றி கண்டவர்.

இரட்டைப்புலவருக்கு ’மண்தின்ற பாணமே’ என்று இடையடி எடுத்துக்கொடுத்தவர் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி