Saturday, 14 November 2015

காளமேகப்புலவர் குதிரை காவிரி-ஆறு

காளமேகப்புலவர் குதிரை, காவிரியாறு இரண்டும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.

பாடல்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும்நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே. (15)

குதிரை ஓடும்.
நல்ல குதிரைக்கு அடையாளமானசுழிசுத்தம் உண்டாகியிருக்கும்.
பகைவரை விரட்டியடிக்கும்.
தன்னை வளர்ப்பவனிடம் அன்பால்தலை சாய்க்கும்.

காவிரி ஆறு நீராய்ஓடும்.
நீர்ச்சுழி இருக்கும்.
நீர் சுத்தம் ஆகும்.
தன்னைத் துன்னும் அலரைச்சாடும் (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும்).
மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன்அதன்மீது தலைசாய்ப்பர்.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி