Monday, 9 November 2015

காளமேகப்புலவர் வைக்கோல் யானை

வைக்கோல் போர்
காளமேகப்புலவர் வைக்கோலும் யானையும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து நிறுவியுள்ளார்.
 பாடல்

வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும்சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலும் மால்யானை யாம். (3)

வைக்கோலானது வாரிக் களத்தில் அடிக்கப்படும்.
பின்னர் அது வைக்கோல் போர்க் கோட்டையாக புகுத்தப்படும்.
வைக்கோல் போரில் அது சிறந்து பொலிவுற்றிருக்கும்ய

யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும்.
பின்பு வந்து அதன் கட்டுத்தறியாகிய கோட்டைக்குள் புகும்.
போர்க்களத்தில் சிறப்புடன் பொலிவுற்று விளங்கும்.




No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி