Monday, 17 August 2015

சேயாறு Seyaru


படத்தில் சேயாறு சாலக்குடி ஆறு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலி = நெல் 

  • சேர நாட்டில் பாயும் ஆறு பெரியாறு.
  • தமிழ் நூல்கள் இதனைப் ‘பேரியாறு’ எனக் குறிப்பிடுகின்றன.
  • இந்த ஆற்றில் வந்து சேரும் முதன்மையான ஆறுகள் ஐந்து. முதிரைப்புழை, முல்லையாறு, செறுத்தொணி, பெரிஞாண்குட்டி, இடைமடை என்பன.
  • Muthirapuzha River., MullayarRiver., Cheruthoni River. Perinjankutti River. Edamala River.

  • இவற்றில் முதிரைப்புழை என்பது முதிரைமலையில் தோன்றிப் பாயும் ஆறு. முதிரமலை இக்காலத்தில் முதுமலை என வழங்கப்படுகிறது. 
  • இதனைச் சங்ககாலத்தில் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பின்னர் ஆண்ட அரசன் குமணன்.

  • செறுத்தொணி என்பதன் பொருள் வயலைச் சேறாக்கு என்பதாகும். 
  • (செறு = வயல், தொணி = சேறு). 
  • வயலைக் குறிக்கும் ‘செறு’ என்னும் சொல் ‘செய்’ எனவும் வழங்கப்படும். (நன்செய், புன்செய்). 
  • சங்ககாலத்தில் சேயாறு என வழங்கப்பட்ட ஆறு செய்யாறு, செறுத்தொணி என மருவி வழங்கலாயிற்று.  


இதனை மலைபடுகடாம் நூல்வனைகலத் திகிரியின் குமிழி சுழலும்,         
துனை செலல் தலைவாய், ஓவு இறந்து வரிக்கும்,                475
காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்   
என்று குறிப்பிடுகிறது.

  • சேயாற்றில் வரும் பெருவெள்ளத்தில் குமிழிச் சுழல்கள் குயவன் சக்கரம் சுழல்வது போலச் சுழலுமாம். 
  • இதன் நீரைக் கொண்டுசெல்லும் வழியில் இருக்கும் மதகுகளில் (ஓ = மதகுப் பலகை) தண்ணீர் பீரிட்டுக்கொண்டு பாயுமாம். 
  • கண்டவர் ஆசை கொள்ளும் வண்ணம் கண்ணுக்கு இனிமையாக இருக்குமாம். 
  • புதுப்புது வருவாயைத் தருமாம். 
  • இதன் கரைவழியே செல்லுங்கள் என்று கலைஞர்களைக் கூத்தர் ஆற்றுப்படுத்துவது போல் இந்த நூலைப் பாடிய புலவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.