Saturday, 29 August 2015

பட்டினப்பாலை Pattinappalai திருமாவளவன்

திருமால்
திருவமர் மார்பன்
திரு அமர் மார்பன்
திரு மா வளவன்
திருமாவளவன்
திருமாவளவன் கோல் போல் இன்பம் தரும் இவளது தோளைப் பிரிந்து, திருமாவளவன் வேல் போல் துன்பம் தரும் காட்டுவழியில் வரமாட்டேன் என்று தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்வதாகப் பட்டினப்பாலை பாடல் அமைந்துள்ளது.

இந்த நூலின் இறுதியில் தனிப்பாடலாகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ள வெண்பாவோ காலில் நெருப்புப் பட்டக் கரிகாலன் கொண்டவன் கரிகாலன் எனப்பட்டான் என்று குறிப்பிடுகிறது.
இதன்படித் திருமாவளவனே கரிகாலன் என்று கொள்ளவேண்டியுள்ளது.

பொருநராற்றுப்படை பாட்டுடைத் தலைவன் பெயரை அந்த நூல் கரிகால் வளவன் என்று குறிப்பிடுகிறது (பாடல் அடி 148)

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் பெயர் கொண்ட மன்னர்கள் சங்ககாலத்தவர்.
நலங்கிள்ளி அரசனின் தம்பி மாவளத்தான் என்னும் பெயரைப் பெற்றிருந்தான்.

மணவாளன் என்னும் பெயர் திருமாலைக் குறிக்கும்.
மணவாளன் என்னும் பெயரை மண+ஆளன் என்றும் மண+வாளன் என்றும் பிரிக்கலாம்.

இதில் உள்ள வாளன் என்னும் சொல் வளவன் என்பதன் திரிபு.
அதாவது வாளன் > வளவன்.
திரு = செல்வம்
மா = மகள்
திருமா = செல்வத் திருமகள்
செல்வத்திருமகளை மார்பிலே கொண்ட வளவன் = திருமால். அவன் திருமாவளவன் எனப் போற்றப்பட்டவன்.

திருமாலின் பெயரைத் திருமாவளவன் என்று சங்ககாலத்தில் சூட்டிக்கொண்டனர்.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி