Saturday, 29 August 2015

பட்டினப்பாலை Pattinappalai அகப்பொருள் பாடல்

கடலில் மூழ்கிக்கிடக்கும் காவிரிப்பூம் பட்டினம்
பண்டைய தமிழ்ப் பாடல்களில் காணப்படும் பொருள்களை அகம், புறம் எனப் பகுத்துக் காண்பது வழக்கம். அகத்திணைப் பாடல்களில் பாடல்-தலைவனின் பெயர் சுட்டப்படுவது இல்லை. உவமையாக வரும்.

முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய,   
வாரேன்; வாழிய, நெஞ்சே! (அடி 220)

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய   
வேலினும் வெய்ய, கானம்; அவன் 300
கோலினும் தண்ணிய, தட மென் தோளே!

திருமாவளவன் வேல் போல் கொடுமையான காடு.
திருமாவளவன் ஆட்சி போல் குளுமையானது என்னவளின் தோள்.
நெஞ்சே!
பொருள் தேடக் காட்டுவழியில் செல்ல அழைக்கிறாய்.
இவளை இட்டுவிட்டு வரமாட்டேன்.
என்று தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்வதாக இந்தப் பா1டல் அமைந்துள்ளது.

எனவே இது அகப்பொருள் பாடல்.
புறப்பொருள் அன்று.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி