Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 9

நன்னன் பெயர் விளக்கம்  
  • நன்னன்சேய்நன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இவனது பெயரில் வரும் சேய் என்னும் சொல்லிக்கு மகன் என்றும், முருகன் என்றும் பொருள் காணமுடியும்.
  • எனவே நன்னன் மகன் நன்னன் என்று ஒரு விளக்கம் அமையும்.  
  • முதலில் உள்ள நன்னன் தந்தை பெயர் என்றும் அடுத்து வரும் சேய்நன்னன் இவன் பெயர் என்றும் கொள்ளமுடியும். சேட்சேன்னி நலங்கிள்ளி என்னும் பெயர் இவ்வாறு அமைந்திருத்தலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
தடக்கைப் பெரும்பூண்
நன்னனை நாடி நசை ஏர் உழவர்
அவன் நன்னன் சேய் நன்னன். அவனிடம் செல்வீர் ஆயின்
நல்லேர் உழவர் என்றும், சொல்லேர் உழவர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதை அறிவோம்.
  • நெல்லும் சொல்லும் விளைய அவர்கள் உழவு செய்பவர்கள்.
  • இங்கு ஆசையை ஏராகப் பூட்டி உழும் மறவர் குலம் வருகிறது.
  • இவர்கள் பாராட்டுச் சொல் விளைச்சலைப் பெறுவதற்காக உழவு செய்பவர்கள்.
புனல் அம் சாயல் 
  • தண்ணீர் போலத் தெளிவும் குளுமையும் உடையவன்
  • ஆற்றில் ஊற்று நீர் சாய்ந்து வந்து வழங்குவது போல எதிரிகளின் போர்முனையைப் பாழ்படுத்துவதில் தம்மை நெருங்கமுடியாத வலிமை கொண்ட வீரர்களுக்குப் புத்தமுது நறைக்கள்ளை வழங்கும் தன்மை கொண்டவன் நன்னன்.
  • அவன் வில்லுக்குச் சொல்லித்தரும் வலிமை மிக்க கையை உடையவன். அதாவது வில்லாண்மை உடையவன். அதனைக் குறிக்கும் வகையில் கையில் பூண் அணிந்தவன்.
  • இதுவா அதுவா, இப்படிப்பட்டவரா அப்படிப்பட்டவரா என்று அறிவு தடுமாறாமல் ஆராந்துகொண்டிருக்காமல் நல்லதைத் தீர்மானிக்கும் திறம் கொண்டவன். இதுதான் அவனது ‘மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி’.
நன்று உணர் சூழ்ச்சி 

  • ஆளைப் பார்த்து அறிவு மாறுபடும் குணம் அவனுக்கு இல்லை. 
  • எல்லாரிடமும் நல்லனவற்றையே காணும் இயல்பினை உடையவன் அவன். 
  • வில்லாண்மையில் அவன் வல்லவன். 
  • தனக்குக் கிடைக்கும் பெருமையையே அணிகலனாகப் பூண்டவன்.
  • அவனிடம் சென்றால்….
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின்,    
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப் 60
புது நிறை வந்த புனல் அம் சாயல்,       
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி,   
வில் நவில் தடக் கை, மே வரும் பெரும் பூண்,         
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு,   
உள்ளினிர் சேறிர் ஆயின், பொழுது எதிர்ந்த 65

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி