Friday, 28 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 80

நன்னன் கொடைப் பழக்கம் 

  • வந்ததே போதும் – என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான். 80
  • சுற்றத்தாரின் வலப்புறம்
  • மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள்.
  • நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உங்களின் கருத்தை அறிந்தவனாகப் பேசத் தொடங்கி விடுவான்.
  • நீங்கள் என்னிடம் வந்ததே போதும். உங்கள் வருத்தம் பெரிது என நான் அறிவேன். – என்பான்.
  • போரிட வந்த எதிரிகளை எதிர்கொள்ளப் போர்வீரர்களோடு சென்ற அவன் தன் அரண்மனை முற்றத்தில் தங்கச் செய்வதற்காகத் தன் சுற்றத்தாரை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்படைப்பான்.
  • உங்களை அவர்களுக்கு வலப்புறம் இருக்கச் செய்வான்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

வென்றிப் பல் புகழ் விறலோடு ஏத்தி,
சென்றது நொடியவும் விடாஅன், 'நசைதர     545
வந்தது சாலும்; வருத்தமும் பெரிது' என,      
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து,           
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி,
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ,

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி