Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 8

மாலை
நன்னன் மார்பில்
மலர்மாலை
அணிந்திருந்தான்
மார்பின்மீது மங்கையரின் மழைக்கண்

  • கனிமழை பொழியும் கானத்தைச் சிறகடிக்கும் பறவைகள் தேடிக்கொண்டு விரைந்து [துனை] பரப்பது போல மாலையில் வண்டு மொய்க்கும் மார்பினை உடையவன் அவன்.
  • அவனது மனைவியரின் கண்கள் மலர்போல் பூத்து மழைபோல் குளிர்ந்து அவனது மார்பை மொய்த்துக் கொண்டிருக்கும்.
  • அப் பெண்டிரின் தோள் மூங்கில் போல் வளைந்தும், முலை முகிழ்த்தும் கிடக்கும்.
  • குறிப்பிட்டுச் சொன்னால் அன்புமழை பொழியும் அழகியரின் கணவன் அவன்.
அங்கிருக்கும் வள்ளல் 
மங்கையர் கண்கள் மொய்க்கும் மலர்த்தார் 
அணிந்த மார்பினை உடையவன். 8

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய,   
துனை பறை நிவக்கும் புள்ளினம் மான,          55
புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின்,
வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள்              
மலர் போல் மழைக் கண் மங்கையர், கணவன்;      

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.