Friday, 28 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 79

கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் – என்று பாடும்போது …
விருந்திற்பாணி - அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள்.
பின்னர் நன்னனை வாழ்த்துங்கள்.
உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள் பலரின் வழிவந்தவன் நீ என்றாலும், அவர்களுக்குள் நீ யானை போன்றவன்.
வல்லவர்களிடையே வறுமையில் வாடும் நல்லவர் யார் என்று தெரிந்துணரும் பெரியோர்கள் பலர் இன்று இந்த உலகத்தில் வாழ்வு முடிந்து உலகின் பொது நியதியாகிய இறப்பைத் தழுவி நிற்கிறார்களே என்று எண்ணி கொடைக் கடமையை நீயே எடுத்துக்கொண்டு செம்மாந்து நிற்கும் செம்மலோய் !
என்றெல்லாம் நீங்கள் அவனைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே, …

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

விருந்தின் பாணி கழிப்பி, 'நீள் மொழிக்            
குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல்,            540
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,             
இடைத் தெரிந்து உணரும், பெரியோர் மாய்ந்தென,             
கொடைக்கடன் இறுத்த செம்மலோய்' என,

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி