Friday, 28 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 78

முழவு
அந்த முற்றத்தில்
விறலியர் பாட்டுடன்,
சீறியாழ் இசைத்து,
கடவுளை வாழ்த்திவிட்டு
மருதப்பண் பாடுங்கள்.

  • அம்முற்றத்தில் இருந்துகொண்டு உங்களின் இசைக்கருவிகளை முழக்குங்கள்.
  • முழவு இடிபோல் முழங்கட்டும்.
  • மூங்கிலில் செய்த கொம்பை ஊதுங்கள்.
  • கருங்கோட்டுச் சீறியாழில் மருதப் பண்ணை எழுப்புங்கள்.
  • அப்போது யாழ் நரம்பின் பண்ணிசைக்கு ஏற்ப, விறலியர் பாடட்டும். ஆடட்டும்.
  • தொன்று தொட்டு இருந்துவரும் மரபுமுறை வழுவாமல் கடவுளை வாழ்த்திய பின்னர் அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப,        
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,            
மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ்
நரம்பு மீது இறவாது, உடன் புணர்ந்து ஒன்றி,              535
கடவது அறிந்த இன் குரல் விறலியர்
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,        
அருந் திறல் கடவுள் பழிச்சிய பின்றை            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.