Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 74

மாவின் வடிச்சேறு
(மாம்பழச் சா1று)
மற்றும்
இதில் விளைந்த தாரம் என்னும்
ஊறல்-குழம்பு
இரண்டும் நன்னன் வாயிலில்
கிடைக்குமாம்
நன்னன் அரண்மனைப் பகுதியில் காணும் உயிரினங்களும், கிடைக்கும் உணவுப் பொருள்களும்
  • உடும்பு - அரக்கு போன்ற செம்மண் பரலில் கொடுக்குப் பிடி பிடித்து மேயும் ஆண் உடும்பு
  • மஞ்ஞை – மலைக்கே அழகு தந்து நடந்தாடும் மடக்கண் மயில்
  • கானக்கோழிச் சேவல் - விட்டிசை தந்து கூவும் காட்டுக் கோழிச் சேவல்.
இனி வருவன தின்பண்டம்
  • பலாப்பழம்
  • மாம்பழத்தாரம்
  • இனிப்பு மாம்பழத்தில் பிழிந்தெடுத்து வடித்து விளையச் செய்த மாம்பழச்சாறு (இக்காலத்து மாஸா போன்றது) இது இடித்த மாவு போல் இனிப்பது.
இனி மீண்டும் மகிழ் பொருள்

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

அரக்கு விரித்தன்ன செந் நில மருங்கின்,       
பரல் தவழ் உடும்பின் கொடுந் தாள் ஏற்றை,               
வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை,     
கானக்கோழி கவர் குரல் சேவல்,            510
கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம்,
இடிக் கலப்பு அன்ன, நறு வடி மாவின்               
வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம்,             

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.