Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 73

கயமுனி
யானைக் கன்று
குட்டி-யானை

  • நன்னனுக்குத் தந்த மலைதரு பொருள்கள் (கடாம்)
  • அக்கால விலங்கியல் பூங்காவாகவும், அருங்காட்சியகமாகவும் வைக்கப்பட்டிருந்தவை


  • நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம்.
  • அவற்றோடு விளையாடித் திளைக்கலாம்.
  • ஆமான் – விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் போன்ற பெரிய மான்களின் தொகுதி வேறிடம் சென்ற போது திக்குத் தெரியாமல் நின்றுவிட்ட தனிமான்
  • கயமுனி – குட்டி யானை
  • எண்கின் குருளை – வட்ட அடியையுடைய வாய் பேசாத கரடிக் குட்டி
  • வருடை – பிளவு பட்ட அடி கொண்ட மலையாட்டின் கடா
  • தீர்வை – படமெடுத்தாடும் நல்ல பாம்பைப் பிடித்துண்ணும் கருடன்
  • உழுவை – குகையில் வாழும் புலி
  • மரையான் – புலியிடம் தப்பிய காட்டுப் பசுவின் கன்று.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட         
எரி கான்றன்ன பூஞ் சினை மராஅத்து,              
தொழுதி போக வலிந்து அகப்பட்ட       
மட நடை ஆமான், கயமுனிக் குழவி,                500
ஊமை எண்கின் குடாவடிக் குருளை
மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந் தாள் 
வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர்,  
அரவுக் குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை,       
அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த               505
மடக் கண் மரையான் பெருஞ் செவிக் குழவி,            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.