Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 71

கருங்கடை எஃகம்
வலிமையான முனைகள உடைய வாள், வேல் கருவிகள்

  • வேல் சாத்தியிருக்கும் அவன் ஊர் வாயிலுக்குள் செல்லுங்கள்
  • அது நன்னனின் படைக்கொட்டில்
  • படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும்.
  • அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை.
  • அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

பொருந்தாத் தெவ்வர் இருந் தலை துமிய,    
பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர்         
கருங் கடை எஃகம் சாத்திய புதவின்,  490
அருங் கடி வாயில் அயிராது புகுமின்:               

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


2 comments:

  1. https://www.facebook.com/SAATITHATAMILAR/posts/2869506646660080?__tn__=-R-R-R

    ReplyDelete
  2. மலைபடுகடாம் சிந்து சமவெளி இலக்கியம் - தமிழர் ஆய்வு பார்வை மேலோங்க வேண்டும்.

    ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி