Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 69

உழத்தியர் வயலில் நெல் அறுப்பர்
அப்போது பாணர் தண்ணுமை மேளம் முழக்குவர்
சேயாற்றின் கரையிலேயே செல்லுங்கள்

  • நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு, தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும்.
  • அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வனையும்போது சக்கரத்தில் பானை சுழல்வது போலச் சுழலும்.
  • வெள்ளம் வேகமாகப் பாயும். அப்போது அது மதகை அடைத்து வைக்கும் ஓப்பலகை இடுக்குகளில் பீரிட்டுக் கொண்டு பீச்சும். இதனைக் கண்டவர்கள் மீண்டும் காண ஆசைப்படும்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும்.
  • பார்த்துக் கொண்டே சேயாறு ஆற்றங்கரையில் செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,    
செங் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்,        
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,               
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,          
துனை செலல் தலைவாய், ஓவு இறந்து வரிக்கும்,                475
காணுநர் வயாஅம், கட்கு இன் சேயாற்றின் 
யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்     

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.