Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 64

நெய் | வெண்ணெய்
நெய்ச்சோறு

  • அமலை என்பது பொங்கல் சோறு.
  • அது தங்கம் இறைந்து கிடப்பது போன்று காணப்பட்டது.
  • வழுவழுப்பாக உள்ள நுண்ணிய இழுது போன்ற வெண்ணெய் போட்டுச் சமைக்கப் பட்ட நெய்ச்சோறு அது.
  • அசதிக்குத் தங்கும் இடங்களில் எல்லாம் இதனை நீங்கள் பெறலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி 440
வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை,             
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,              
அசையினிர் சேப்பின், அல்கலும் பெறுகுவிர்            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி