Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 63

அவரைக்காய்
அவரைக்காய்ப் புளிக்குழம்பு

  • வேங்கைப் பூ சிவப்பாக மலரும்.
  • வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும், நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும்.
  • அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு.
  • தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை.
  • அந்தக் குடிசைகளில் எல்லாம் அந்த அவரைக்காய்ப் புளிக்குழம்புச் சோற்றை நடந்துவந்த களைப்புத் தீரப் பெறலாம்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

செவ் வீ வேங்கைப் பூவின் அன்ன,       
வேய் கொள் அரிசி, மிதவை சொரிந்த,               435
சுவல் விளை நெல்லின், அவரை அம் புளிங் கூழ்
அற்கு, இடை உழந்த நும் வருத்தம் வீட,        
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய 
புல் வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;         

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.