Thursday, 27 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 62

பூவும் தளிரும் மிடைந்த மாலை
நடைபாதையில் ஓடும் ஊற்று

  • முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும், மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள்.
  • முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள்.
  • அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள நீரைப் பருகுங்கள்.
  • தொடர்ந்து செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்,      
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி,  430
திரங்கு மரல் நாரில், பொலியச் சூடி,   
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென
உண்டனிர், ஆடி, கொண்டனிர் கழிமின்           

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி