Wednesday, 19 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 6

பாணர் கூட்டம் நிழலில் இளைப்பாறல்

  • இவர்கள் நடந்து செல்லும்போது மர நிழலில் தங்கினர்.
  • அந்த நிழல் குளத்தில் குளிக்காமலேயே குளத்தில் குளிப்பதுபோல் குளுமையாக இருந்தது.
  • புனிறு என்பது தாய் பிள்ளைப் பேற்றின்போது அடையும் துன்பம்.
  • மலை ஏறும்போது உண்டான பிள்ளைப்பேறு போன்ற துன்பம் நிழலில் தங்கும்போது போய்விட்டது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
6
கயம் புக்கன்ன பயம் படு தண் நிழல்
புனல் கால் கழீஇய மணல் வார் புறவில்,       
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி,      
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ!        50

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்



No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.