Wednesday, 26 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 57

இது அண்மைய கால வண்டி
நன்னன் பாணர்களுக்கு ஊர்தியாகத்
தேர் வழங்கினான்
ஊரே கொடை எழங்கும்

  • நன்னன் தேனொழுகும் பூ மாலையைத் தலையில் அணிந்திருந்தான்.
  • நம்மைப் போன்றவர்களுக்கு அவன் தேர்களை வழங்குவான்.
  • கவிந்து வழங்கும் அவன் கைகள் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வீசும் கொடைத்தன்மை கொண்டவை.
  • அவனது முன்னோர்களும் அத்தகைய கொடையாளிகள்.
  • அவன் ஊரும் அப்படிப்பட்டது.
  • விரும்பிய இடத்தில் தங்கி அச்சமின்றிச் செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவிகை              
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே,                400
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்     
ஆங்கனம் அற்றே, நம்மனோர்க்கே;   
அசைவுழி அசைஇ, அஞ்சாது கழிமின்              

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.