Wednesday, 26 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 56

இது போல ஊர்த்திசை காட்டும்
பெயர் பொறித்த மரங்கள் இருந்தன 
வழிகாட்டி மரம்

  • இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர்.
  • பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன.
  • அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர்கள் நடுங்குவர். இப்படிப்பட்ட காட்டுப் பாதைகள் பல இருந்தன.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

செல்லும் தேஎத்து, பெயர் மருங்கு அறிமார்,              
கல் எறிந்து, எழுதிய நல் அரை மராஅத்த       395
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை,       
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் 
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே:          

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி