Wednesday, 26 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 55

புல் முடிந்து அடையாளம்
வைத்தல்
கல்லில் புல் முடிந்து அடையாளம் வைத்தல்

  • உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள்.
  • முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக,  390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்           
பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்    
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்           

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி