Wednesday, 26 August 2015

மலைபடுகடாம் Malaipadukadam 54

நடுகல்
பெயரொடு நட்ட கல்
நடுகல்

  • யானைகள் போரிடுவது போலக் காட்சி தரும் பெரிய பாறைக்கற்கள் இருக்கும். தூவான மழை பொழியும்போது வழுக்கிவிடும் பகுதிகள் பலவற்றை அவை கொண்டிருக்கும். பார்த்துக் கவனமாகச் செல்ல வேண்டும்.
  • மறவன் ஒருவன் பகைவர்களைச் சாய்த்தான். மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். எனினும் போரில் மாண்டான். அவனுடைய வீரத்தோடு தன் வீரத்தை ஒப்பிட்டுப் பார்த்த பிற மறவர்கள் தம் செயலுக்காக நாணினர். அவனது புகழைப் போற்றினர்.
  • பலரும் நடந்து செல்லும் வழி பிரியுமிடங்களில் அவனுக்குக் கல் நட்டனர். அவனத்து பெயரையும் புகழையும் அதில் பொறித்து வைத்தனர். அப்படிப்பட்ட  கல்லேசு கவலைகள் பலவற்றைக் கடந்து செல்வீர்கள்
  • அவற்றைத் தொழுது போற்றுங்கள்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

களிறு மலைத்து அன்ன கண்கூடு துறுகல்
தளி பொழி கானம் தலை தவப் பலவே;            385
ஒன்னாத் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென,   
நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்             
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;            

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் பாடல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி